Breaking News

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது – சம்பிக்க

எரிபொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களும் எட்டப் படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை – இந்தியன் ஒயில் நிறுவனம் ஆகியன எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தன. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த மூன்று மாதங்களில் 17 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் விலையை அதிகரிப்பதற்கான தேவை காணப்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். எரிபொருட்களுக்கு விலைச் சுட்டெண்ணை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.