யாழ். செம்மணி பகுதியில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு
யாழிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த கதோரஸ்ட் வாகனத்துடன் யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சம்பவம் குறித்து தெரிய வருவது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் நித்திரை தூக்கத்தின் காரணமாகவே வாகனத்துடன் மோதியுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.