சவுதி மசூதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்
சவுதி அரேபியாவில், அல் கதீ என்ற கிராமத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் வௌியிட்டுள்ளது.
அங்குள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் நேற்று 150-க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே புகுந்த தற்கொலை படை தீவிரவாதி உடலில் கட்டி வந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்த குண்டுவெடிப்பால் 21 பேர் உடல் சிதறி உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்தநிலையில் இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.