Breaking News

ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என பூஜை - இளங்கோவன்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என்று தமிழக அமைச்சர்கள் பூஜை செய்கிறார்கள் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.


திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின எழுச்சி நாள் கூட்டம் நடைபெற்றது. இதில்சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்சி சார்பில் இளங்கோவன், குஷ்பு ஆகிய இருவருக்கும் கிரீடம் அணிவித்து, வீரவாள் அளித்து மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இளங்கோவன், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் அளித்த வாக்குகள் எதையும் நிறைவேற்றவில்லை.

ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் திறந்துள்ளது மட்டும்தான் அவர்கள் சாதனை. தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கோவில் கோவிலாக சென்று ஜெயலலிதாவுக்காக பூஜை செய்கிறார்கள். இதெல்லாம், ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை ஆகவேண்டும் என்று செய்யவில்லை, அவர் விடுதலை ஆகக்கூடாது என செய்கிறார்கள். இது உலகமகா நடிப்பாக உள்ளது என கூறியுள்ளார்.