Breaking News

குற்றவாளிகளை பொது இடத்தில் தண்டிக்க வேண்டும் (காணொளி)

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா மீது மேற்­கொள்­ளப்­பட்ட பாலியல்
வன்­முறை மற்றும் படு­கொலை ஆகி­ய­வற்­றுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் விசா­ர­ணை­க­ளையும் கொழு ம்­புக்கு மாற்­று­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இச் செயற்­பாடு குற்­ற­வா­ளிகள் தப்­பிப்­ப­தற்கே வழி­வ­குக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.ஸ்ரீ­தரன் நேற்று சபையில் வலி­யு­றுத்­தினார்.

எனவே சம்­பந்­தப்­பட்­டோரை யாழ்ப்­பா­ணத்­தி­லேயே தடுத்து வைத்து யாழ். நீதி­மன்­றத்­தி­லேயே விசா­ர­ணை­களை மேற்­கொண்டு குற்­ற­வா­ளி­க­ளுக்கு பொது இடத்தில் தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வர­லாற்றில் எந்­த­வொரு தமி­ழரும் நீதி­மன்­றங்­க­ளுக்கு கல்­வீச்சு நடத்­தி­யதும் கிடை­யாது தாக்­குதல் மேற்­கொண்­டதும் கிடை­யாது. யாழ். மாவட்­டத்தில் ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள் மேற்­கொண்ட ஆர்ப்­பாட்­டத்தை திசை திருப்பி நீதி­மன்­றத்­துக்கு கல்­வீச்சை மேற்­கொண்­டது அங்­குள்ள இரா­ணுவ ஒட்­டுக்­கு­ழுவே ஆகும் என்றும் அவர் குற்றம் சாட்­டினார்.


பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற தேசிய கல்வி அதி­கார சபை (தாக்கல்) சட்ட மூலம் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

ஸ்ரீதரன் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொ­லைக்கு எதி­ரான மக்கள் போராட்­டம் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரான போராட்­ட­மா­கவே இங்கு பார்க்­கப்­ப­டு­கி­றது. அங்கு இடம்­பெற்­றது சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான போராட்டம் அல்ல. வித்­தி­யாவை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தி அவரை படு­கொலை செய்த கொடி­ய­வர்­க­ளுக்கு உச்­ச­பட்­ச­மான தண்­ட­னையைப் பெற்றுக் கொடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தியே ஆசி­ரி­யர்­க­ளாலும் மாண­வர்­க­ளாலும் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது.

கடந்த காலங்­களில் வடக்கில் நிகழ்ந்த பார­தூ­ர­மான சம்­ப­வங்கள் மூடி மறைக்­கப்­பட்­டுள்­ளன. தீர்­வுகள் கிடைக்க பெற­வில்லை. இதன் கார­ண­மா­கவே வித்­தியா தொடர்­பான விட­யமும் மூடி மறைக்­கப்­பட்டு விடக் கூடாது என்ற வகையில் போராட்டம் நடத்­தப்­பட்­டது.

இலங்கைத் தமிழர் ஆசி­ரியர் சங்­கமும் ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் இணைந்தே இந்த ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தி­யி­ருந்­தனர். எனினும் வட்­டுக்­கோட்­டையில் இருந்து வந்த குழு ஒன்­றி­னா­லேயே நீதி­மன்­றம் மீது கல்­வீச்சு நடத்தி தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இக்­கு­ழு­வா­னது இரா­ணு­வத்­துடன் தொடர்­பு­டைய ஒட்­டுக்­கு­ழு­வாகும். இந்தக் குழுவே அடா­வ­டி­களை மேற்­கொண்­டது.

ஆனாலும் ஆசி­ரி­யர்­களும் அப்­பா­வி­களும் கைது செய்­யப்­பட்­டனர். வர­லாற்றில் இது­வ­ரையில் எந்­த­வொரு தமி­ழரும் நீதி­மன்­றங்­களின் மீது கல்­வீச்சு நடத்தி தாக்­குதல் மேற்­கொண்­டது கிடை­யாது. வித்­தி­யாவின் படு­கொலை மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களை இன்று சர்­வ­தேசம் உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது. எனவே வித்­தி­யா­வுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

எனினும் வித்­தி­யாவின் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை கொழும்­புக்கு மாற்­று­வ­தற்கும் யாழப்­பாணம் நீதி­மன்­றத்தில் உள்ள இவ்­வி­சா­ர­ணையை கொழும்­புக்கு மாற்­று­வ­தற்கும் தற்­போது முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வாறு இடம்­பெ­று­மானால் குற்­ற­வா­ளிகள் தப்­பித்துக் கொள்­வ­தற்கு வழி­வ­குக்கும்.

எனவே மனித நேயம் படைத்த சக­லரும் இவ்­வி­ட­யத்தில் அக்­கறை செலுத்த வேண்டும் என்­ப­துடன் மேற்­படி சம்­பந்­தப்­பட்­டோரை யாழ்ப்­பா­ணத்­தி­லேயே தடுத்து வைத்து வழக்கு விசாரணைகளை யாழ்ப்பாணத்திலேயே மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் எவ்வாறு வெள்ளவத்தைக்கு வர முடியும் என்பது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இனிமேலும் இவ்வாறான அநியாயங்கள் இடம்பெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.