பொதுபல சேனாவின் அரசியல் கட்சி தலைவர் கோத்தபாய?
பொதுபல சேனா அமைப்பினால் உருவாக்கப் படவிருக்கின்ற அரசியல் கட்சியின் தலைவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என தெரிவிக்கப்படுகின்றது.
கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா, கோத்தபாயவை தலைவராக நியமிக்கவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 19ஆம் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கமைய இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ள எவரும் இலங்கையில் அரசியலில் ஈடுபட முடியாதென்பதனால் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும்,புலம் பெயர்ந்த விடுதலை புலிகளினால் தனக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருவதனால் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய கோத்தபாய தீர்மானித்துள்ளதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளன.