தாக்குதலுக்குள்ளான நீதிமன்ற கட்டடதொகுதி இராணுவத்தினால் புனரமைப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதி இன்று இராணு வத்தினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த 20 ஆம் திகதி பொலிஸாரின் கட்டுக்களையும் உடைத்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் கற்கள் , பொல்லுகள் மற்றும் கண்ணாடிப் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது.