பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்னும் இரண்டு வாரக்காலப்பகுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்படி இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 70 மில்லியன் ரூபாய் பொதுச்சொத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் பசில் ராஜபக்சவுடன் மூன்று அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படும்போது அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. பசில் ராஜபக்சவும் ஏனைய மூன்று அதிகாரிகளும் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.