அரசின் மீது நம்பிக்கையில்லை - சரத் பொன்சேகா
ஐக்கிய தேசிய கட்சி அராசாங்கம் அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்கள் மூலம் எதனையும் செய்துக்கொள்ள முடியவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிலியந்தலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாட்டாளரே இவ்வாறான ஒரு விடயத்தை தன்னிடம் குறிப்பிட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சரத் பொன்சேகா சமீபத்தில் அம்பலங்கொடை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது தற்போதைய அரசாங்கம் பாரிய மோசடிகாரர்களை கைது செய்து நல்லாட்சிக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
திருடர், மோசடிகாரர்களை விரட்டுவதற்கு பிரதான கட்சிகள் இரண்டிற்கு அவசியம் ஒன்றும் இல்லை எனவும், திருடர்களுடன் செயற்படுகின்ற அரசாங்கம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.