மீண்டும் அரசியலில் களமிறங்குவேன் - திஸ்ஸ
அரசியலில் மீளவும் விரைவில் களமிறங்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில வாரங்களில் மீளவும் தாம் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சட்ட ரீதியாக நீக்கப்படவில்லை. நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன்.
நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் பிரச்சினைகள் குறித்து அவதானித்து வருகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நான் வெளியேறவில்லை. எனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மட்டுமே விலகினேன் ரணிலையும் சஜித்தையும் ஒன்று சேர்க்க முயற்சித்ததனால் கட்சியை விட்டு வெளியேற நேரிட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் எதிர்காலம் தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.