Breaking News

மீண்டும் தமிழக முதல்வர் அரியணையில் ஜெயலலிதா (படங்கள் இணைப்பு)

தமிழகத்தின் புதிய முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று   பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து 2 பெண்கள் உட்பட 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு பதவிப் பிரமாணத்தையும், இரகசிய காப்புப் பிரமாணத்தையும் ஆளுநர் ரோசய்யா செய்து வைத்தார். 

இதற்காக, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சரியாக, 10.40 மணிக்கு விழா மேடைக்கு வந்தார் ஜெயலலிதா. அவரை தலைமைச் செயலாளர் வரவேற்றார். சரியாக 11.00 மணிக்கு விழா மேடைக்கு வந்தார் ஆளுநர். 

ஆண்டவன் மீது ஆணையிட்டு... முதலில் முதல்வராக ஜெயலலிதாவை பதவியேற்க வருமாறு தலைமைச் செயலாளர் அழைத்தார். ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் செய்து வைத்தார். 

பதவியேற்பு உறுதிமொழியை வாசித்த ஜெயலலிதா, ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுவதாகக் கூறி பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார் என தமிழக ஊடகமான தினமணி கூறியுள்ளது.  இந்தநிகழ்வில் சசிகலா, மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஸ்ணன், நடிகர்களான சிவகுமார், ரஜினிகாந்த் மற்றும் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.