நிர்மாலைத் தாக்கியது ராஜபக்ஷவின் ஆட்களே! ஜோசப் ஸ்டாலின்
கிருளப்பனையில் இடம்பெற்ற மே தின ஊர்வலத்தைக் காணச் சென்ற பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறியை, மஹிந்த ராஜபக்ஷவின் கூலிப் படைகள் தாக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை வெளியிடுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தியும், இந்த வன்முறை கலாச்சாரத்தை தோற்கடிக்கவும் முன்னோக்கி வருமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஜனநாயகத்தை போற்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.