Breaking News

ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் துப்பாக்கியுடன் பிரவேசித்தவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வொன்றில் துப்பாக்கியுடன் வந்ததாக கூறப்படும், இராணுவ கோப்ரல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கடந்த 25ம் திகதி அகுணகோலபெலெஸ்ஸ பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்ற புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று இவரைக் கைதுசெய்துள்ளனர்.  இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 

இதேவேளை குறித்த நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் சந்தேகநபர் கலந்து கொண்டதாக முன்னதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கைதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.