Breaking News

டயஸ்போராக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை அரசு உணர்ந்துள்ளது

டயஸ்போராக்களுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். 

வௌிவிவகார அமைச்சு டயஸ்போரா விழாவை ஒழுங்கு செய்துள்ளது. 

வர்த்தகம், கலை, கலாசாரம், கல்வி, விளையாட்டு என்று சாதகமான அனைத்து துறைகளிலும் குறிப்பாக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் உட்பட எல்லா வழிகளிலும் இலங்கை பூர்வீகமாகக் கொண்டவர்கள் பங்கெடுத்து, இலங்கையுடன் எவ்வாறு நெருக்கமாக பணிபுரியவது என்று அறிந்துகொள்வதே இதன் நோக்கம் என அவர் கூறினார். 

ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீன்மியரை சந்தித்த போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.