நாடாளுமன்றைக் கலைக்க மகிந்த சதித்திட்டம் தீட்டுகிறார் - லக்ஷ்மன் கிரியெல்ல
"அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்பது மாயையான கருத்தாகும்.
இந்த விடயத்தில் எந்தக் கட்சிகளுக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எனினும். 20 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தி நாடாளுமன்றம் கலைப்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன." - இவ்வாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
'' ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்க முடியாது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பிற்போட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதானது ஏற்றுக்கொள்ள முடியாது. இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சதித்திட்டமாகும்" - என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.