உத்தம வில்லன் திரைப்படம் இன்று வெளியாகிறது!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படம் இன்று வெளியாகிறது.
இதற்கிடையில், நேற்று படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் இடையிலான பிரச்சனை தொடர்பாக படம் ரிலீசாவது தள்ளிப்போனதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதன் விளைவாக இன்று உத்தம வில்லன் திரைப்படம் இன்று வெளியாகிறது!