பிரதமர் பதவியிலிருந்து ரணில் வெளியேற வேண்டும்! இல்லையேல் வெளியேற்றுவோம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அப்பதவியில் இருக்க சட்ட ரீதியான அங்கீகாரமோ மக்கள் ஆணையோ கிடையாது. எனவே பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் வெளியேற்றுவோம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 70 க்கு மேற்பட்ட எம்.பி. க்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அடுத்த பாராளுமன்ற அமர்வில் சபாநாயகருக்கு கை யளிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜோன் செனவிரட்ன எம்.பி மேலும் தெரிவிக்கையில், பிரதமராக பதவி வகிப்பதற்கு ரணில் விக்கிரமசி ங்கவிற்கு எந்த விதமான சட்ட ரீதியான அங் கீகாரமோ அல்லது மக்கள் ஆணையோ கிடையாது. பலாத்காரமாகவே அப்பதவி யில் இருக்கின்றார்.
எனவே அப்பதவியிலிருந்து அவர் வெளியேற வேண்டும். தொடர்ந்து பலாத்காரமாக இருந்தால் வெளியேற்றுவோம்.அதற்காகவே அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவு ள்ளோம். இதில் தற்போது 70 க்கு மேற்ப ட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதனை சபாநாயகருக்கு கையளிப்போம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தொடர்பில்லை. ஐக்கிய மக் கள் சுதந்திர முன்ன ணியின் கட்சித் தலைவர்களினதும் உறுப்பினர்களுமே இதனை முன்னெடுக்கின்றனர்.
அத்தோடு 100 நாட்களுக்குத்தான் ரணில் பிரதமராவதற்கு ஆதரவு வழங்கினோம். இன்று 100 நாட்கள் கடந்து விட்டன. இனி யும் ஆதரவை தொடர முடியாது. அதேவேளை பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் பிரதமருக்கு கிடையாது.
2010 ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கிய ஆணையே இன்றும் பாராளுமன்றத்திற்கு உள்ளது. எனவே ஆட்சியை எமக்கு கையளிக்க வேண்டும். பின்னர் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின்னர் எமது ஆட்சியின் கீழேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டு மென் றும் ஜோன் செனவிரட்ன எம்.பி தெரிவித் தார்.