Breaking News

பேராசிரியர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்

பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி மற்றும் மேலும் ஒரு பேராசிரியரும் தாக்கப்பட்டமை தொடர்பில், பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் கண்டனம் வௌியிட்டுள்ளது. 

இது குறித்து ஒன்றியத்தின் தலைவர் பிரபாத் ஜயசிங்க வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னர் நாட்டில் நிலவிய அரசியல் கலாச்சாரத்தை நினைவூட்டும் வகையில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. 

கடந்த முதலாம் திகதி கிருளப்பனையில் இடம்பெற்ற மே தின நிகழ்வொன்றின் போது, பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.