மஹிந்தவின் மீள் பிரவேசம் சாத்தியமாகுமா? அரசியல் தீப்பொறி
சர்வாதிகார ஆட்சியயொன்றுக்கு எதிராக அல்லது சர்வாதிகாரத்தை
நோக்கிய பாதையில் பயணிக்கின்ற ஓர் ஆட்சிக்கு எதிராக மக்கள் பல நாடுகளில் வன்முறை வழியிலான ஆயுதப் புரட்சியின் மூலமே, நல்லாட்சியை மலரச் செய்திருக்கின்றார் கள். ஆனால் இலங்கையில் மஹிந்த ராஜ பக்ஷவின் சர்வாதிகார போக்கிலான ஆட் சியை ஜனநாயகப் புரட்சியொன்றின் மூலமே மக்கள் நல்லாட்சியை மலரச் செய்திருக்கின்றார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித் துள்ளார்.
நோக்கிய பாதையில் பயணிக்கின்ற ஓர் ஆட்சிக்கு எதிராக மக்கள் பல நாடுகளில் வன்முறை வழியிலான ஆயுதப் புரட்சியின் மூலமே, நல்லாட்சியை மலரச் செய்திருக்கின்றார் கள். ஆனால் இலங்கையில் மஹிந்த ராஜ பக்ஷவின் சர்வாதிகார போக்கிலான ஆட் சியை ஜனநாயகப் புரட்சியொன்றின் மூலமே மக்கள் நல்லாட்சியை மலரச் செய்திருக்கின்றார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித் துள்ளார்.
இன்று பலராலும் பல நாடுகளினாலும் பேசப்படுகின்ற இந்த வெற்றி, அரசியல் செயற்திறன் மிக்க திட்டமிடலுக்கு கிடைத்த வெற்றியாகும். இது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல என்றும் மங்கள சமரவீர கூறியிருக்கின்றார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் அப்போது பதவியில் இருந்த முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகப் பதவியைக் கைப்பற்றுவதற்காக நடத்திய ஜனாதிபதி தேர்தலே இத்தகைய ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே, இந்தத் தேர்தலை அவர் நடத்தியிருந்தார். இதன் மூலம் நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்தச் செய்கையின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார் என்றும் தேர்தல் முடிந்த கையோடு பலர் விமர்சனம் செய்திருந்தார்கள்.
அரசியல் சதியொன்றின் மூலமே தன்னை எதிரணியினர் தேர்தலில் தோற்கடித்திருந்தனர் என்றும், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் திட்டமிட்ட வகையில் தனக்கு எதிராக வாக்களித்து, தன்னைத் தோல்வியுறச் செய்ததாகவும், பலவாறாக அவர் காரணங்களைத் தெரிவித்திருந்தார்.
முடி சூடா மன்னனாக நிகரில்லாத நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டவராக அரியணையில் வீற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தேர்தலில் தோல்வியைத் தழுவ நேரிடும் என்று ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர், கடந்த ஆட்சியில் இடம்பெற்றிருந்த ஊழல்கள், மிகவும் பாரிய நிதிமோசடிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இவ்வாறானதொரு சூழலில்தான், மீண் டும் அரசியலுக்குள் வருவதற்கான முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டிருக்கின்றார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தனது ஆதரவாளர்களின் ஊடாக தனது அரசியல் மீள் பிரவேசத்தை வெளிப்படுத்திய அவர், இப்போது நேரடியாக தனது நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதியாகிய மஹிந்த ராஜபக் ஷவுக்கும், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பு ஒன்றில் வரப்போகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி அவர் தான் சார்ந்த கட்சியின் தலைவராகிய மைத்திரிபால சிறிசேனவிடம் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் மட்டுமே ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களாக, வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது வழக் கம். ஆனால் பிரதமர் பதவிக்கென குறிப் பிட்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற நடைமுறை நாட்டில் இல்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டி, மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கையைப் புறந்தள்ளியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதேவேளை, இந்தக் கோரிக்கையை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் ஆராயலாம் என்றும் கட்சியின் தலைவராகிய மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக இந்தச் சந்திப்பு குறித்த தகவல்களை செய்தியாளர்களுக்கு வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்து ஜனாதிபதி பதவியை மஹிந்த ராஜபக்ஷ வகித்திருந்தார். அதேபோன்று அந்தக் கட்சியின் தலைவராகவும் நாட்டின் ஜனாதிபதியாகவும் இப்போது மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார். புரட்சிகரமான தேர்தல் என்று வர்ணிக்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவரும், வெற்றி பெற்றவருமாகிய - அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததும், அரசியல் விடயங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தியதும் முக்கிய விடயமாகக் கருதப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல், சர்வாதிகாரப் போக் குடன் ஊழல்கள் மலிந்த ஆட்சியை நடத்தியவரும், தேர்தலில் தோல்விகண்டவருமாகிய ஒருவருடன் புதிய ஜனாதிபதி பேச்சுக்கள் நடத்தியது பொருத்தமானதல்ல என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. இவ்வாறான சந்திப்பும் அரசியல் விடயங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும், முன்னைய ஜனாதிபதியை அரசியலுக்குள் அனுமதித்து, நாட்டில் மீண்டும் பழைய அரசியல் நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கின்ற ஒரு செயற்பாடாகவும் சிலர் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக்குவது, கலைக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை நீடிப்பது, புதிய ஆட்சியில் பலவீனமடைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவது, பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் குழுவில் மஹிந்த அணியினரை யும் பிரதிநிதிகளாக உள்வாங்குவது, ஊழல் இலஞ்சம் மோசடி குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வது ஆகிய விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இந்த விடயங்கள் யாவுமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்தவின் கைகளை அரசியல் ரீதியாக ஓங்கச் செய் வதற்கான ஒரே நோக்கத்தை இலக்காகக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதியாகிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு கணிசமான மக்கள் வாக்களித்திருந்ததன் மூலம், சிங்கள மக்கள் மத்தியில் அவருக்கு அரசியல் ரீதியாக ஆதரவு இருக்கின்றது என்பதை புதிய ஜனாதிபதி கருத்திற் கொண்டு, அந்த மக்களுடைய வெறுப்பைச் சந்திக்கத் தக்க காரியங்களைச் செய்யக் கூடாது என்பதற்காகவே, இந்தச் சந்திப்பிற்கு அவர் உடன்பட்டிருந்தார் என்று கருதப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரப் போக் கைக் கொண்டிருந்தார். நாட்டின் வளங்களைச் சுரண்டி ஊழல் நடவடிக்கைகளுக்கு இடமளித்திருந்தார் என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்த போதிலும், அவர் மீது வெறுப்பைக் காட்டி அல்லது அவரை வெளிப்படையானதோர் அரசியல் எதிரியாக உருவகப்படுத்தி அவருடைய ஆதரவாளர்களான சிங்கள மக்களின் அரசியல் ரீதியான ஆதரவை நிரந்தரமாக இழப்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இந்த விடயத்தில் அவர் நிதானமாகச் சிந்தித்துச் செயற்பட்டிருப்பதாகவும் தென்னிலங்கை விமர்சகர்கள் கருதுகின்றார்கள்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண் டும் அரசியலுக்குள் பிரவேசித்து கோலோச் சுவதற்கான சந்தர்ப்பத்தை அறவே இல்லாமல் செய்வதற்காகவே முக்கியமாக 19 ஆவது அரசியல் திருத்தத்தை மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்து நிறைவேற்றியதாகவும் அரசியல் அவதானிகள் சிலர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். ஆயினும் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல, அபரிமிதமான அதிகாரங்களைக் கொண்டதாக மஹிந்த ராஜபக்ஷவினால் 18 ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் மறுசீரமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பதவிக்கு வருகின்ற எவரும் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி நாட்டில் சர்வாதிகார ஆட்சிப் போக்கை இனிமேல் எந்தக்காலத்திலும் உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே 19 ஆவது திருத்தத்தை அவர் கொண்டு வந்துள்ளார் என்று பலரும் கருதுகின்றார் கள்.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று, அந்த அதிகாரங்களை, மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று சுய அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தாமல், அந்த அதிகாரங்களைக் குறைப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தியிருக்கின்றார். இதற்குச் சான்றாக 19 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் ஆதாரமாகத் திகழ்கின்றது. தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவேன் என்று சூளுரைத்துள்ள மைத்திரிபால சிறிசேன, அந்த மக்களின் தீர்ப்புக்கு விரோதமாக ஒருபோதும் செயற்படமாட்டேன் என்றும் உறுதியளித்திருக்கின்றார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களுக்கு அவர் உடன்படவில்லை என்றும், அந்தப் பேச்சுக்கள் பலனின்றி முடிவடைந்துள்ளன என்றும் அவதானிகள் கருதுகின்றார்கள். அது மட்டுமல்லாமல் பிரதமர் வேட்பாளராக மஹிந்த களம் இறங்குவதற்கு உடன்படாத மைத்திரிபால சிறிசேன, அந்த விடயத்தைக் கட்சி யின் மத்திய குழுவின் ஊடாக நிரந்தரமாக நிராகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றார் என்று ஊகம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டில் நல்லாட்சிக்கான அடித்தளத்தை இட்டுள்ள மைத்திரிபால சிறிசேன அதனைப் படிப்படியாக பலப்படுத்தி முன் னோக்கி நகர்த்திச் செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார். எனவே அவருக்கு முழு ஆதரவையும் வழங்கிச் செயற்பட வேண்டும் என்பது அவருக்கு அரசியல் ரீதியாக நெருக்கமானவர்களின் கருத்தாகும்.
இந்த நாட்டில் முப்பது வருடங்களாகத் தொடர்ந்திருந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தேசிய வீரனாகவே மஹிந்த ராஜபக்ஷவை சிங்கள மக்கள் நோக்கியிருக்கின்றார்கள். அத்தகைய மதிப்புக்கு உரிய ஒருவரை மிகவும் அவதானமாகக் கையாள்வதன் ஊடாகவே அவருக்கு ஆதரவான மக்களின் ஆதரவைப் படிப்படியாக வென்றெடுக்க முடியும் என்ற நோக்கத்தில் மைத்திரிபால சிறிசேன காரியங்களை முன்னெடுத்திருப்பதாகத் தெரிகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்ற அதே சந்தர்ப்பத்தில், நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தினர் 18 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் முன்னைய ஆட்சியில் இடம் பெற்ற பாரிய ஊழல்கள் மோசடிகள் அம்பலமாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் ஊடாக இந்தத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலுக்குள் அதிகார பலமுள்ள பதவியாகிய பிரதமர் பதவியை இலக்கு வைத்து பிரவேசிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் வெளியாகியிருப்பது நிச்சயமாக சிங்கள மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் என்று நம்பலாம்.
ஏனெனில் அமைச்சர் மங்கள சமரவீர ராஜபக் ஷக்கள் மீது சுமத்தியுள்ள ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டானது மிக சாதாரணமானதல்ல. அது பற்றிய விபரங்கள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கின்றன.
ராஜபக் ஷ குடும்பத்தினர் வெளிநாடுக ளில் பதுக்கி வைத்த சொத்துக்களின் பெறும தியானது, தேசிய மொத்த உற்பத்தியின் நான்கில் ஒரு பங்காகும் என்ற குண்டை யும் அவர் தூக்கிப் போட்டிருக்கின்றார். இந் தப் பாரிய மோசடியை முழுமையாகக் கண்டறிவதற்காக நான்கு நாடுகளின் உதவியைத் தாங்கள் நாடியிருப்பதாகவும் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.
அரச சொத்துக்கள், அரச நிதி மோசடி என்பன தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிதிக்குற்றவியல் பிரிவினர் முன்னைய அரச தரப்பினர் பலரை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள். அவர்களில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக் ஷ முக்கியமானவராகும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக் ஷவும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டி ருக்கின்றது.
முன்னைய ஆட்சியின் அச்சாணிகளாகவும் மும்மூர்த்திகளாகவும் திகழ்ந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவருடைய சகோதரர்களான பசில் ராஜபக் ஷ மற்றும் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோருக்கு எதிரான நிதிக்குற்றங்கள், இலஞ்ச ஊழல்கள், மோசடிகள் என்பன நிரூபிக்கப்படும் பட்சத்தில் ராஜபக் ஷ குடும்பத்தினர் பெரும் தண்டனைகளை அனுபவிக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்களுக்கான குற்றச்சாட்டுக்களும் கூட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது நேரடியாக சுமத்தப்பட்டாலும ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி பதவி என்பது இந்த நாட்டின் அதியுயர் பதவியாகும். இந்த நாட்டின் அதியுயர் தலைவர் அவரே. அத்தகைய தலைமைப் பதவியில் இருந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வதென்பது மேலோட்டப் பார்வையிலும், சாதாரணமாகவும் ஏற்றக்கொள்ளத்தக்க விடயமாகாது.
நெருப்பில்லாமல் புகையமாட்டாது. எனவே, ராஜபக் ஷக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அல்லது அவர்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்படுகின்ற மோசடிகள், வெளிநாடுகளில் சொத்துப் பதுக்கல்கள் என்பன வெறும் கட்டுக்கதைகள் என்றோ, வெறுமனே அரசியல் பழிவாங்கலுக்காகத் தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களாகவே கருத முடியாது. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் மீது நிதிமோசடி மற்றும் ஊழல் இலஞ்சம் போன்றவற்றுடன் தொடர்புடைய விடயங்களில் அவர்களைத் தொடர்புபடுத்தி பல விடயங்கள் குற்றச்சாட்டுக்களாகப் பேசப்பட்டிருந்தன.
அவர்கள் நிகரற்ற அதிகார பலத்தைக் கொண்டிருந்ததனால், அவர்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்களும், பொது விடயங்களில் அக்கறை கொண்டிருந்தவர்களும் வெளிப்படையாக அந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராகச் செயற்பட துணியவில்லை. அவ்வாறு துணிந்திருந்தால் அவர்கள் உயிர் தப்ப முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
அவர்கள் நிகரற்ற அதிகார பலத்தைக் கொண்டிருந்ததனால், அவர்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்களும், பொது விடயங்களில் அக்கறை கொண்டிருந்தவர்களும் வெளிப்படையாக அந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராகச் செயற்பட துணியவில்லை. அவ்வாறு துணிந்திருந்தால் அவர்கள் உயிர் தப்ப முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
இத்தகைய ஒரு நிலைமையில் மஹிந்த ராஜபக்ஷ அரசியலுக்குள் மீள் பிரவேசம் செய்ய முயற்சிப்பதென்பது, இந்த நாட்டு அரசியலின் மோசமான நிலைமையை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. இலங்கையில் அரசியலுக்கு வருபவர்கள் எல்லோருமே நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில், இலங்கை அரசியல் என்பது தெற்காசிய பிராந்திய நாடுகளில் உள்ளது போன்று ஊழல்கள் நேர்மையின்மை என்பவற்றின் நிலைக்களனாகவே உள்ளது. ஆயினும் அதியுயர் பதவியை வகித்தவர்களும், இந்த நாட்டின் மோசமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்களும் மோசடிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை எவரும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில், இலங்கை அரசியல் என்பது தெற்காசிய பிராந்திய நாடுகளில் உள்ளது போன்று ஊழல்கள் நேர்மையின்மை என்பவற்றின் நிலைக்களனாகவே உள்ளது. ஆயினும் அதியுயர் பதவியை வகித்தவர்களும், இந்த நாட்டின் மோசமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்களும் மோசடிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை எவரும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
புதிய அரசாங்கம் குறுகியதொரு காலப்பகுதியில் நாட்டில் உருவாக்கியுள்ள நல்லாட்சியை, வரப்போகின்ற பொதுத் தேர்தலில் மேலும் வலுவுள்ளதாக முன்னெடுத்துச் செல்வதற்குரிய நிலைமையை உருவாக்க வேண்டியது நாட்டு மக்களின் கடமையாகும். இந்தக் கடமையைச் சரிவர செய்யத் தவறினால், மீண்டும் ஓர் ஊழல்கள் மலிந்த ஆட்சியே நாட்டில் நிலைபெறும். அத்தகைய ஆட்சியொன்று வருமாகில், அது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் வருங்காலச் சந்ததியினருக்கும் நன்மை பயக்கப் போவதில்லை.
எனதுவே, முன்னைய ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அல்லது அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விடயங்கள் குறித்து நேர்மையான அரசியல் கலப்பற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். அத்தகைய நிரூபணத்தின் ஊடாக அவர்களுக்கு எதிராக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கையொன்றின் ஊடாகவே நாட்டில் நல்லாட்சி தொடர்ந்து நிலவவும், ஜனநாயகம் தழைத்தோங்கவும் வழிபிறக்கும்.