தமிழக மீனவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு
தம்மை மத்திய அரசாங்கம் வித்தியாசமான முறையில் நடத்துவதாக குற்றம்சுமத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் விரைவில் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தமது போராட்டத்துக்கு அரசியல் தலைவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது.
இலங்கையின் கடல்பரப்புக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொண்டதை அடுத்தே இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தமது படகுகள் சேதமடைந்துள்ளமையால் அதற்காக நட்டஈட்டை பெற்றுத்தருமாறும் மீனவர்கள் கோரியுள்ளனர்.