Breaking News

"யார் வேண்­டு­மா­னாலும் இரா­ஜி­னாமா செய்­யலாம்''

யாருக்கு வேண்­டு­மென்­றாலும் எந்­த­வொரு பத­வியில் இருந்தும் இரா­ஜி­னாமா செய்து கொள்ள முடியும். நான்கு அமைச்­சர்­களின் பதவி வில­க­லா­னது அவர்கள் இந்த அர­சாங்­கத்தின்பங்­கு­தா­ரர்கள் இல்லை என்­ப­தையே காட்­டு­கின்­றது என்று பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரி­வித்தார்.

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட பிர­தி­ய­மைச்­ச­ரிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

ஶ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் அதன் உறுப்­பி­னர்­களின் தீர்­மானம் தொடர்பில் கருத்து தெரி­விப்­ப­தற்கு எனக்கு எந்­த­வொரு அதி­கா­ரமும் கிடை­யாது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஐக்­கிய தேசியக் கட்சி முழு­ம­ன­துடன் இருந்து செயற்­படும்.

இது ஒரு சிறு­பான்மை அர­சாங்கம் என்­ப­தனால் யார் விலகிச் சென்­றாலும் எந்த ஒரு பிரச்­சி­னையும் ஏற்­படப் போவ­தில்லை. தாம் வகிக்கும் பத­வி­க­ளி­லி­ருந்து யாருக்கு வேண்­டு­மென்­றாலும் இரா­ஜி­னாமா செய்து கொள்ள முடியும். நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளமையானது அவர்கள் இந்த அரசாங்கத்தின் பங்குதாரர்கள் இல்லை என்பதையே காட்டுகின்றது என்றார்.