மூளாயில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு!
மூளாய், கொத்தத்துறைப் பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொத்தத்துறை இந்து மயாணத்திற்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை தெற்கு இன்பச்சோலையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி (வசந்தி) என்பவரது சடலமே இவ்வாறு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் சடலத்தையும் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.