Breaking News

இலங்கை கிரிக்கெட் அணிக்கு களத்தடுப்பு பயிற்சியாளராக ஜொண்டி

இலங்கை அணியின் களத்­த­டுப்பை கட்­டி­யெ­ழுப்ப தென்­னா­பி­ரிக்க அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் ஜொண்டி ரோட்ஸ் முன்­வந்­துள்ளார்.

 இலங்­கையில் தங்­கி­யி­ருந்து பத்து நாட்கள் களத்­த­டுப்பு பயிற்­சி­களை வழங்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான சுற்றுத் தொடர்­வரை ஜொண்டி ரோட்ஸ் களத்­த­டுப்பு பயிற்­சி­யா­ள­ராகச் செயற்­ப­ட­வி­ருக்­கிறார். 

அது­த­விர தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இளைய கிரிக்கெட் அணி­வீ­ரர்­க­ளுக்­கான களத்­த­டுப்புப் பயிற்­சி­களை வழங்­கு­வ­தற்கே அவர் இலங்கை வரு­கிறார். அதே­வேளை களத்­த­டுப்பில் உள்ள புதிய தொழில்­நுட்பம் குறித்தும் அவர் பயிற்சிகளை வழங்குவார் என்று கூறப்படுகிறது.