Breaking News

‪‎யாழில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்‬! பெண் விடுதலை சிந்தனை அமைப்பு ஏற்பாடு.

புங்குடுதீவு மாணவியின்‬ கொலையினைக் கண்டித்து ‪நாளை‬சனிக்கிழமை ‪பெண் விடுதலை சிந்தனை அமைப்பின்‬ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அவ்அமைப்பு அறி்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

‪யாழ்‬.பஸ் நிலையத்திற்கு முன்பாக ‪காலை‬ 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் பெண்கள் அமைப்புடன் பொது அமைப்புக்கள் கலந்துகொள்ளவுள்ளன.கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் போராட்டங்களின் அடுத்த நகர்வாக பெண்கள் அமைப்புக்கள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்..


பாதிக்கப்பட்டர்களுக்கு விரைவாக உரிய தீர்வு கிடைக்கவேண்டும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்றும் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது. பொதுமக்களை இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் பெண் சிந்தனை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.