படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு ஆதரவாக கொழும்பில் அமைதி பிரார்த்தனை
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்காக நேற்று மாலை 6.30 அளவில் அமைதியாக சோகத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வொன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்கவின் ஏற்பபாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள் பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
அப்பாவியான புங்குடுதீவு மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம் இந்த நாட்டில் எந்தவொரு பெண்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், அவரது ஆத்ம சாந்திக்காகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை போன்று மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்