Breaking News

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் இராஜினாமா

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் ஆணையாளர் எல்.கே.விமலசந்திர இராஜினாமா செய்துள்ளதாக, அந்த ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸ்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் முதல் எல்.கே.விமலசந்திர உத்தியோகபூர்வமாக பதவி விலகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டத்துக்கு அமைய புதிய ஆணைக்குழுவை நியமிக்க இடமளிக்கும் வகையில் அவர் இராஜினாமா செய்துள்ளதாக தில்ருக்‌ஷி டயஸ்விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்த மேலதிக தகவல்களுக்காக தொடர்ந்தும் அத தெரணவுடன் இணைந்திருங்கள்..