Breaking News

பிரித்தானியாவிற்கு நான்காவது முடிக்குரிய இளவரசி பிறந்தாள் (காணொளி இணைப்பு)

பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டனிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் குழந்தையும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக அரச குடும்ப அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டனிற்கு இன்று அதிகாலை 6.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டு, St.Mary மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், பிரசவ வலி சிறிது சிறிதாக அதிகரித்தாக மருத்துவமனையிலிருந்து செய்திகள் வெளியாகின.

இன்று பிற்பகலில், இளவரசிக்கு சுகப்பிரசவம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், பிரித்தானிய நேரப்படி, 08.34 மணியளவில், கேட் மிடில்டன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இளவரசி குழந்தையை பெற்றெடுக்கும் வேளையில் அவரது கணவரும், இளவரசருமான வில்லியமும் அருகில் இருந்துள்ளார்.

பிறந்த குழந்தை 8lbs 3oz(3.7 கிலோகிராம்) என்ற எடையுடன் நலமாக உள்ளதாக Kensington அரண்மனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இளவரசிக்கு குழந்தை பிறந்த தகவலை, கேட் மிடில்டனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், கேட் மிடில்டன் ஆகியோருக்கு ஏற்கனவே ஓர் ஆண் குழந்தை உள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த ஆண் குழந்தைக்கு ஜோர்ஜ் எனப் பெயரிட்டனர். தற்போது பிறந்துள்ள பெண் குழந்தை நான்காவது முடிக்குரிய இளவரசியாகும்.