Breaking News

வித்தியா விடயத்தில் விரைவில் நீதி நிலைநாட்டப்படும் - பிரதமர் உறுதி

புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தில் பொலிஸார் தமது கட­மையை சரி­வர செய்­வ­தற்கு மக்­களின் ஒத்­து­ழைப்பு மிக அவ­சி­ய­மா­ன­தாகும். அதை மக்கள் விளங்­கிக்­கொண்டு செயற்­பட வேண்டும். மக்கள் சட்­ட த்தை கையில் எடுப்­பது நிலை­மை­களை மேலும் மோச­மாக்குமென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

வடக்கில் அசம்­பா­வி­தங்கள் இடம்­பெ­று­வதை கட்­டுப்­ப­டுத்­தவும் மாண­வியின் படுகொலை தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றி­யவும் விசேட பொலிஸ் குழு­வினர் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாட­சாலை மாண­வியின் கொலை­யுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படும் சிலரை கைது செய்­துள்­ ள­துடன் விசா­ர­ணை­களும் மேற்­கொள்ளப்­பட்டு வரு­கின்­றன. இந்த விட யத்தில் விரைவில் நீதி நிலை

நாட்டப்படும் என்றும் பிரதமர் கூறினார். புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை விவ­காரம் வடக்கில் பெரும் அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

வடக்கில் அமை­தி­யின்மை உரு­வா­கி­யுள்ள நிலையில் நாம் சட்­ட­ரீ­தி­யாக எமது நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். குறிப்­பாக பாட­சாலை மாண­வியின் கொலை­யுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படும் சிலரை கைது செய்­துள்­ள­துடன் விசா­ர­ணை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. எனினும் மக்கள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­வதை தவிர்க்க வேண்டும். 

எக்­கா­ர­ணத்தை கொண்டும் மக்கள் சட்­டத்தை கையில் எடுக்க வேண்டாம். பொலிசார் தமது கடை­மையை சரி­வர செய்­வ­தற்கு மக்­களின் ஒத்­து­ழைப்பு மிக அவ­சி­ய­மா­ன­தாகும். அதை மக்கள் விளங்­கிக்­கொண்டு செயற்­பட வேண்டும்.

கேள்வி : வடக்கில் அமை­தி­யின்­மையை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்கம் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது ?

வடக்கில் தற்­போ­தைய நிலை­மைகள் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­துள்­ளன. அதேபோல் உண்மை நிலை­மை­களை கண்­ட­றி­வ­தற்­கான விசேட பொலிஸ் குழு­வொன்றும் விசேட சட்­டத்­த­ர­ணிகள் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. வெகு விரைவில் இச் சம்­பவம் தொடர்பில் உண்மை நிலை­மைகள் கண்­ட­றி­யப்­படும்

கேள்வி : எனினும் பொலி­ஸாரின் செயற்­பா­டுகள் மீது பொது மக்கள் அதி­ருப்­தியில் உள்­ள­னரே?

பொலிஸார் மந்த நிலையில் செயற்­ப­டு­வ­தாக ஒரு சிலர் கருத்து தெரி­விக்­கின்­றனர். ஆனால் இதை ஒரு போதும் நான் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன். பொலிஸார் தமது கட­மையை சரி­யாக செய்து வரு­கின்­றனர். யார் குற்றம் செய்­தாலும் அது தொடர்பில் சட்ட முறைப்­ப­டியே நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் வடக்கில் தொடர்ந்தும் குழப்பகர சூழல் ஏற்படுவதாக அமைந்து விடும். ஆகவே யார் மீதும் வீண் பழி சுமத்தி அரசியல் நடத்தாது நிலைமைகளை உடனடியாக கட்டுப்படுத்தி சாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.