Breaking News

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

"எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான
சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்.."

என்று சற்று முன்னர் இன அழிப்பு போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலி செலுத்திய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு திட்டமிட்டபடி இன்று காலை பத்து மணியளவில் வடமாகாணசபையால் ஒழுங்கமைக்கப்பட்ட உயிர் நீத்த எமது உறவுகளுக்கான நினைவேந்துதல் நிகழ்வு நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்தார்.