மஹிந்தவின் கனவில் விழுந்தது பேரிடி
இலங்கையில் தேசிய அரசாங்கம் நடைமுறையில் உள்ள நிலையில்,விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார்
எனினும் இவரின் மீள் அரசியல் பிரசன்னத்தை தடுப்பதில் மைத்திரி – ரணில் தலைமையிலான குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.இதன்போது நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த போட்டியிட வேண்டும் என்பது பிரதான விடயமாக பேசப்பட்டது.
எனினும் இது தொடர்பில் காத்திரமான பதிலை மைத்திரி தரப்பு வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மஹிந்தவின் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அனைவரும் எதிர்பார்த்திருந்த பிரதமர் வேட்பாளர் தொடர்பில் திருப்திகரமான பதில் எதுவும் இந்தக் கூட்டத்தில் கிடைக்கவில்லை. எனினும் இது தொடர்பில் மீண்டும் சந்தித்து பேச முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் இணக்கம் தெரிவித்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.