தற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்கள் முன்வைக்கப்படாது – பிரதமர்
தற்போதைய நாடாளுமன்றத்தில் இனிமேல் எந்த புதிய சட்டமூலமும் முன்வைக்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்துலக ஊடகவியலாளர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் சந்தித்த போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமு சட்டமூலங்களைச் சீர்குலைக்க சில சக்திகள் காத்திருக்கின்றன. மக்களுக்கு ஆதரவான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு இந்த சக்திகள் முயற்சிக்கின்றன.
19வது திருத்தச்சட்டத்திலும் இது தான் நடந்தது. தகவல் உரிமைச் சட்டத்திலும் கூட இதே முயற்சிகள் இடம்பெறுகின்றன. எனவே அடுத்த நாடாளுமன்றத்தில் தான் தகவல் உரிமைச் சட்டம் சமர்ப்பிக்கப்படும். தற்போதைய நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.