Breaking News

பத்து வரு­டங்­களில் மஹிந்த செய்­யா­ததை நூறு நாட்­களில் மைத்­திரி செய்­துள்ளார் - பிர­தமர்

கடந்த பத்து வருட கால­மாக ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜ­ பக் ஷ செய்­யா­ததை இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நூறு நாட்­களில் செய்து காட்­டி­யுள்ளார். நாம் ஆரம்­பித்­துள்ள பணி­களை நிறை­வேற்ற எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மக்கள் சிந்­தித்துச் செயற்­பட வேண்டும் என ஐக்­கிய தேசியக்கட்சி தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் பொன்­விழா நிகழ்வு நேற்று தல­வாக்­கொல்லை நகர சபை மைதா­னத்தில் அதன் தலை­வரும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் தலை­மையில் இடம்­பெற்­றது. நிகழ்வில் ஜனா­தி­பதி கலந்து கொள்வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்டு பாது­காப்பு ஏற்­பா­டுகள் யாவும் தயா­ராக இருந்த போதிலும், கால நிலை சீர்­கேடு கார­ண­மாக ஹெலி­கொப்டர் பய­ணிக்க முடி­யாத நிலையில் அவர் வர­மு­டி­யாத நிலையில் இருந்­த­தாக இறுதி நேரத்தில் அறி­விக்­கப்­பட்­டது. 

நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு காணிக்­கான உறுதிப் பத்­தி­ரங்­களை கைய­ளித்தார். அமைச்­சர்கள் அர்­ஜுன ரண­துங்க, ரவூப் ஹக்கீம், இரா­ஜாங்க அமைச்­சர்கள் கே. வேலா­யுதம், வீ. இரா­த­கி­ருஸ்ணன் உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும், அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும் கலந்து கொண்­டார்கள்.

நிகழ்வில் பிர­தமர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கடந்த ஐம்­பது ஆண்­டு­க­ளாக ஏழை எளிய மக்­களின் வாழ்­வுக்கும், உரி­மைக்கும் குரல் கொடுத்து வந்­துள்ள தொழி­லாளர் தேசிய சங்கம் தனது பொன்­வி­ழாவைக் கொண்­டா­டு­வ­தற்கு எனது வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு தேடி இந்த இடத்­தில்தான் மாபெரும் கூட்டம் நடத்­தப்­பட்­டது. இன்று அதே இடத்தில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அவர்­களின் வீட­மைப்­புக்­கான காணி உறுதிப் பத்­தி­ரங்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வீடு­களைக் கட்டிக் கொடுப்­ப­தற்­காக போது­மான நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. 1994 ஆம் ஆண்டு நான் பிர­த­ம­ராக இருந்த போது, காணி உறுதிப் பத்­தி­ரங்­களை வழங்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தேன். எனினும், அது சரி­யான முறையில் கைகூ­ட­வில்லை. இருந்தும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சியில் இந்த முறை நான் பிர­த­ம­ராக பதவி ஏற்ற பிறகு, மலை­யக மக்­களின் சார்பில் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­ச­ராக பி. திகாம்­ப­ரமும், பெருந்­தோட்டக் கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்­ச­ராக கே. வேலா­யு­தமும், கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ராக வீ. இரா­த­கி­ருஸ்­ணனும் நிய­மிக்­கப்­பட்டு பெருந்­தோட்ட மக்­க­ளுக்­கான சேவைகள், அபி­வி­ருத்திப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தனி­யான வீடுகள் கட்டிக் கொடுக்­கப்­ப­டுமே அல்­லாமல், மீண்டு லயன்கள் உரு­வாக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஏனைய மக்­க­ளுக்கு இருக்­கின்ற அனைத்து உரி­மை­களும் மலை­யக மக்­க­ளுக்கு இருக்க வேண்டும் என்­பதில் அர­சாங்கம் கவனம் செலுத்தி வரு­கின்­றது. மேலும் இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யு­ட­னான வீட­மைப்புத் திட்­டமும் தொழி­லா­ளர்­க­ளுக்குக் கிடைக்­க­வுள்­ளது.

மலை­ய­கத்தில் விஞ்­ஞானக் கல்வி வளர வேண்டும் என்­ப­தற்­காக 25 பாட­சா­லைகள் தர­மு­யர்த்­தப்­ப­ட­வுள்­ளன. இதன் மூலம் நுவ­ரெ­லியா, கண்டி மாத்­தளை, கேகாலை இரத்­தி­னப்ரி, பதுளை மாவட்­டங்­களைச் சேர்ந்த மாண­வர்கள் பயன்­பெ­ற­வுள்­ளார்கள். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர், நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு தேவை­யான வேலை வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்போம்.

கடந்த ராஜ­பக்ஸ ஆட்சிக் காலத்தில் அவர்கள் சுக­போ­கங்­களி அனு­ப­வித்­தார்கள். சாதா­ரண மக்­களைப் பற்றி அவர்கள் கவ­லைப்­ப­ட­வில்லை. ஆனால், இன்று தொழி­லா­ளர்கள், விவ­சா­யிகள், மீன­வர்கள் எனஅனைத்து மக்களுக்கும் மைத்திரி அரசாங்கத்தில் நன்மைகள் கிடைத்து வருகின்றன. மகிந்த ராஜபக்ஸ பத்து வருட காலத்தில் செய்யத் தவறியதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நூறு நாட்களில் செய்து காட்டியுள்ளதோடு பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாம் ஆரம்பித்துள்ள பணிகளை நிறைவேற்ற எதிரரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றார்.