Breaking News

ஜெ.க்கு எதிராக யாருமே மேன்முறையீடு செய்யாவிட்டால் அதை நாம் செய்வோம் - விஜயகாந்த்

ஜெயலலிதாவுக்கு எதிராக யாரும் மேன்­மு­றை­யீடு செய்யா விட்டால் அதை தே.மு.தி.க. செய்யும் என்று அக் கட்­சியின் தலைவர் விஜ­யகாந்த் தெரி­வித்­துள்ளார்.

அவர், இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது கர்­நா­டக உயர் நீதி­மன்­றத்தில் ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ரான சொத்­து­கு­விப்பு வழக்கின் தீர்ப்பில், வரு­மானம் மற்றும் கடன் கணக்­கீ­டு­களில் தவறு நடந்­தி­ருப்­பது தெள்ளத் தெளி­வாக “உள்­ளங்கை நெல்­லிக்­க­னிபோல்” தெரிய வரு­கி­றது. உச்­ச­நீ­தி­மன்ற நீதியர­சர்­களால் பெரிதும் நம்­பப்­பட்ட, மிகவும் அனு­பவம் வாய்ந்த நீதி­பதி குமா­ர­சாமி கணக்­கீ­டு­களில் தவறு செய்­தி­ருக்­கிறார் என்­பது தற்­செ­ய­லாக நடந்த நிகழ்­வாக தெரி­ய­வில்லை. மாறாக ஏதோ ஒரு அழுத்­தத்­தில்தான் இது நடந்­தி­ருப்­ப­தாக யூகிக்­க­ மு­டி­கி­றது.

இதற்கு முன்பு அரசு ஊழி­யர்­க­ளான பி.எஸ் அதி­காரி ஜெகன்­சே­ஷாத்­திரி வழக்கில் வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக 3 ஆயிரம் ரூபாய் அவர் கணக்கில் இருந்­த­மைக்­காக ஒரு ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. சொத்து சேர்த்­ததில் விலக்­க­ளிக்­கப்­பட்ட வழக்கின் விபரம் தெரிந்த நீதி­ப­திக்கு, தண்­டனை அளிக்­கப்­பட்ட வழக்கின் விபரம் மட்டும் தெரி­யாமல் போனது ஏன்? என்­பது மில்­லியன் டொலர் கேள்­வி­யாகும். பாம­ரரில் இருந்து பணக்­காரர் வரை வாக்­க­ளித்து ஜெய­ல­லி­தாவை முத­ல­மைச்­ச­ராக்­கினால் அதி­கார பலமும், பண­ப­லமும் இருக்­கின்ற மம­தையில் எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்தால் எல்­லா­வற்­றிற்கும் மேலே ஒருவன் இருக்­கிறான் என்­பது இது போன்ற தரு­ணங்­க­ளில்தான் நிரூ­பிக்­கப்­ப­டு­கி­றது.

ஜெய­ல­லி­தா­விற்கு எதி­ரான இந்த வழக்கில் கர்­நா­டக சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி மைக்கேல் டி. குன்ஹா ஆதார ஆவ­ணங்­களை, அலசி ஆராய்ந்து, ஆய்வு செய்து வர­லாற்று சிறப்­பு­மிக்க தீர்ப்பை அளித்­துள்ளார். அத­னால்தான் அவரை நீதி­ய­ரசர் என்று சொல்­கிறோம். ஆனால் கர்­நா­டக உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி குமா­ர­சாமி எதன் அடிப்­ப­டையில் இந்த மூன்று நிமிட தீர்ப்பை அளித்­துள்ளார்? இவரை நீதி­ய­ரசர் என சொல்ல முடி­யுமா? இது நீதித்­து­றைக்கே களங்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ள­தென மக்கள் பேசு­கி­றார்கள். எனவே, கர்நாடக அரசு இந்த வழக்கில் உடனடியாக மேன்முறையீடு செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும். இல்லையேல் அப்பணியை தே.மு.தி.க . மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.