Breaking News

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

அதன்படி இன்று முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகரிலுள்ள விருந்தினர் விடுதி மண்டபத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக்கூட்டம் ஆரம்பமாகியது. 

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். இதில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.