Breaking News

கைது செய்யுமாறு உத்தரவிடும் அதிகாரம் தேசிய நிறைவேற்று சபைக்கு கிடையாது - ஜீ.எல்.பீரிஸ்

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக குரல் கொடுப்­ப­வர்­க­ளது செயற்­பாட்டை நிறுத்­து­வ­தற்­கா­கவும் அவர்க­ளது நட­வ­டிக்­கைகள் அர­சுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்ற பயத்­தி­னா­லுமே எதிர்க்­கட்­சி­யி­லுள்ள பிர­பல உறுப்­பி­னர்களை அர­சாங்கம் கைது­செய்­கின்­றது என முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

மேலும் எந்­த­வொரு நப­ரையும் கைது­செய்­யு­மாறு கட்­ட­ளை­யிடும் அதி­காரம் தேசிய நிறை­வேற்று அதி­கார சபைக்கு கிடை­யாது.அதன் செயற்­பா­டு­களும் சட்­ட­வி­ரோ­த­மா­னவை எனவும் அவர் தெரி­வித்தார்.

நார­ஹேன்­பிட்டி அபே­ராம விகா­ரையில் நேற்று நடை­பேற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநா ட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

விசேட நிதி மோசடி விசா­ர­ணைப்­பி­ரிவின் நட­வ­டிக்­கைகள் அர­சியல் வேலைத்­திட்­ட­மா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பொலி­ஸுக்குள் வேறு ஒரு பிரிவை அமைப்­ப­தற்­கான அதி­காரம் பொலிஸ் மா அதி­ப­ருக்கு மாத்­தி­ரமே இரு க்­கின்­றது. ஆனால் பிர­த­மரின் தலை­மை­யி­லுள்ள அமைச்­ச­ர­வையின் உப குழுவின் கீழேயே விசேட நிதி­மோ­சடி விசா­ர­ணைப்­பி­ரிவு இயங்­கு­கின்­ற­துடன் அதன் கட்­ட­ளை யின் பிர­கா­ரமே செயற்­ப­டு­கின்­றது.

மேலும் அர­சாங்­கத்தின் அர­சியல் நட­வ­ டிக்­கை­க­ளுக்­கா­கவே எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் கைது­செய்­யப்­ப­டு­கின்­றனர். இது­வரை 10க்கும் மேற்­பட்­ட­வர்கள் கைது­செய் ­யப்­பட்­டுள்­ளனர். இது அவர்க­ளது தனி­நபர் சுதந்­தி­ரத்தை பாதிக்கும் செயற்­பா­டாகும்.

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­ பாய ராஜ­ப­க் ஷவை எதிர்­வரும் ஒக்­டோபர் 26ஆம் திக­தி­வரை கைது­செய்ய முடி­யாது என உயர் நீதி­மன்றம் நேற்று முன்­தினம் உத்­த­ர­விட்­டுள்­ளது. இந்த தீர்ப்பானது தனி­ம­னித சுதந்­தி­ரத்­துக்கும் சட்­டத்தின் சுயா­தீன தன்­மைக்கும் கிடைத்த வெற்­றி­யாகும்.

உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்புக்கும் நிதி­மோ­ச­டிக்கும் தொடர்­பில்லை. இதே­வேளை, மத்­திய வங்கி ஆளு­ன­ருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு உயர் நீதி மன்­றத்­தினால் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த தீர்ப்புக்கும் அவ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்ள மத்­திய வங்கி பிணை முறி நிதி­மோ­ச­டிக்கும் தொடர்பில்லை. அடிப்­படை உரிமை மீறல் சம்­பந்­த­மாக நீதி­மன்­றத்­துக்கு வழங்­கப்­பட்ட ஆதா­ரங்கள் போது­மா­ன­தல்ல என்ற கார­ணத்­துக்­கா­கவே அது தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. மாறாக மத்­தி­ய­வங்கி ஆளு­னரின் செயற்­பாடு மோச­டியா இல்­லையா அல்­லது இங்கு தவ­றொன்று ஏற்­பட்­டதா இல்­லையா என்று உயர் நீதி மன்­றத்தின் தீர்ப்பு அமை­ய­வில்லை.

மேலும் நிதி தொடர்பான சகல பொறுப்­புக்­களும் பாரா­ளு­மன்­றத்­துக்கே இருக்­கின்­றது.அத­னால்தான் எதிர்­வரும் 19 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூடும் போது 9அமைச்­சர்கள் உட்­பட 90 உறுப்­பி­னர்கள் கைச்­சாத்­திட்ட குற்­றப்­பி­ரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­க­வுள்ளோம். அத்­துடன் மிகவும் அவ­ச­ர­மாக இதை பாரா­ளு­மன்ற விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளு­மாறும் கேட்­க­வுள் ளோம் என்றார்.