Breaking News

வித்­தியா விட­யத்தில் நீதி நிலை­நாட்­டப்­படும் பிர­தமர் உறு­தி­ய­ளிப்பு - சுரேஷ்

வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தியா தொடர்­பாக பக்­கச்­சார்ப்­பற்ற விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­ப­டு­மென பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக தமிழ்த் ­தே­சியக் கூட்­ட ­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் பாரரளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று நேற்று மாலை 4.30 மணி­ய­ளவில் அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. இச்­சந்­திப்பின் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு உறு­தி­மொழி வழங்­கி­யுள்ளார்.

இச்­சந்­திப்பு குறித்து பாரர்­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் மேலும் தெரி­விக்­கையில்,

புங்­கு­டு­தீவில் பாட­சாலை மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டதன் பின்னர் யாழ்­.கு­டா­நாடு உட்­பட வடக்கில் இயல்பு நிலை முற்­றாக பாதிக்­கப்­பட்டு அச்ச சூழ­லொன்று நில­வு­கின்­றது. மேலும் இக்­கொலை தொடர்­பாக நீதி­யான விசா­ரணை முன்­னெ­டுப்­பதை தடுப்­ப­தற்கும் திசை­தி­ருப்பும் வகை­யிலும் சில சக்­திகள் திரை­ம­றைவில் செயற்­ப­டு­வது போன்ற தோற்­றப்­பாடு எழுந்­துள்­ளது.

ஆகவே, குறித்த சிறு­மியின் விட­யத்தில் பக்­கச்­சார்­பற்ற விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு குற்­ற­வா­ளிகள் நீதிச்­சட்­டங்­க­ளுக்கு அமை­வாக தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதற்கு பதி­ல­ளித்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வி­டயம் தொடர்­பாக தாம் விசேட கவனம் செலுத்­தி­யுள்­ள­தோடு விசா­ர­ணை­களின் போது அநீதி இழைக்­கப்­ப­டாது நீதி நிலை­நாட்­டப்­படும் என குறிப்­பிட்டார்.

அதே­நேரம் ஆட்சி மாற்­றத்தின் பின் யாழ்­.கு­டா­நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த அமை­தி­நி­லைமை சீர்­கு­லைந்து அச்­ச­மான சூழ­லொன்று நிலவுவதை பிர­த­ம­ரி­டத்தில் சுட்­ டிக்­காட்­டி­ய­தோடு குறித்த மாண­விக்கு ஆதர­வா­கவும் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்து ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது சமூக விரோத செயற்­பாட்டில் ஈடு­பட்­ட­தாக கூறி கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விடு­விக்க வேண்டும். அவர்­களில் பாட­சாலை, பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் காணப்­ப­டு­கின்­றார்கள். அப்­பாவி இளை­ஞர்கள் காணப்­ப­டு­கின்­றார்கள். அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்காது விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

அச்சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களிடம் விசார ணைகள் முன்னெடுக்கப்படுதாகவும் சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடை யவர்கள் தவிர ஏனையோர் விரைவில் விடு விக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார் என்றார்.