Breaking News

வெலிக்கடை கைதிகள் கொலை! விசாரணை கோரி ரணிலுக்கு மனு

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் கொல்லப்பட்ட 27 கைதிகளின் பெற்றோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

மே 15ஆம் திகதிக்கு பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் நியாயம் பெற்றுத்தருமாறு பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை மனு ஒன்றை ரணிலிடம் கையளிக்க வுள்ளனர். ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்தநிலையிலேயே கொல் லப்பட்ட சிறைக் கைதிகளின் பெற்றோரும் உறவினர்களும் நீதி கேட்டு மனுவை கையளிக்கவுள்ளனர். அதேநேரம் பொரளையில் பேரணி ஒன்றையும் அவர்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.