Breaking News

வலி.வடக்கு மீள்குடியேற்ற கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது

.இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட ‪‎வலி வடக்கு ‬மீள்குடியமர்வு தொடர்பிலான கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் மீள்குடியேற்ற அதிகார சபை என்பன இணைந்து யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை நடத்தி வந்தன. கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இரண்டு தடவைகள் கலந்துரையாடல் திகதி குறிப்பிட்டு ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ‪‎நாளை காலை‬ 10 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் இது மீள்குடியமர்வு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் ‪வலி வடக்கில் அடுத்த கட்டமாக‬ எந்தப் பகுதிகளை விடுவிப்பது மற்றும் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வாறான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் நாளை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. 

இதேவேளை மீள்குடியேற்ற அதிகார சபையின் அலுவலகம் யாழ்.மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.