Breaking News

தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று மீண்டும் தெரிவு

சென்னையில் இன்று நடைபெறவுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னனேற்ற கழக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில புதிய முதலமைச்சராக ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் தெரிவு செய்யப்பட உள்ளார்.

இந்திய செய்திகள் இவ்வாறு தெரிவித்துள்ளன.

பெங்களூர் தனிக் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்த கர்நாடகா நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிடட 4 பேரையும் கடந்த 11ஆம் திகதி விடுதலை செய்தது.

இதன் மூலம், ஜெயலலிதாவுக்கு முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு ஏற்பட்டிருந்த தடை விலகியது. இந்த நிலையில், அந்த கட்சி உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ள நிலையில், இதன்போது ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட உள்ளார்.

இவ்வாறு முதலமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்படும் அவர் நாளைய தினம் முற்பகல் 11 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.