Breaking News

அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் – ஜோன் கெரி

இலங்கையில் இருந்து திருடப்பட்ட சொத்துக்கள் அமெரிக்காவில் இருந்தால், அவை இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தினால் நேற்று கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

“ஊழல் தொடர்பான விதிகளை நடைமுறைப்படுத்தவும், சொத்துக்களை மீட்கவும், உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களின் விசாரணையாளர்களுடன் இணைந்து பணியாற்ற எமது விசாரணையாளர்கள் தயாராக உள்ளனர். எமது சட்டவாளர்களும் உங்களின் சட்டவாளர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளனர்.

எந்தவொரு திருடப்பட்ட சொத்து அமெரிக்காவில் இருந்தாலும், அது உண்மையான உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும்.” என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் தெரிவித்துள்ளார்