வவுனியா தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு எச்சரிக்கை
வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பஸ்கள் உரிய நேர அட்டவணை இல்லாமையால் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலாளர், போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு அறிவித்துள்ள போதும் வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேர அட்டவணை இல்லாததால் இபோச பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து தனியார் பஸ்கள் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதனால் நேர அட்டவணை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அப்படி இல்லையேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.