உள்ளக விசாரணையின் மூலமே அரசியல் பிரச்சினைக்கு தீர்வு - ரணில்
மகிந்த அரசு தமது சுய வரப்பிரசாதங்களுக்காக இராணுவத்தையும் நாட்டையும் புறக்கணித்து செயற்பட்டதன் விளைவாக புதிய அரசு சர்வதேச விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண் டியுள்ளது.
எனினும் இது குறித்து உரிய வகையில் உள்ளக செயற்பாடுகளை முன்னெடுத்து அரசியல் தீர்வுக்கு செல்வோம்" என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். "மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் புல்வெட்டுவதற்குப் பயன்படுத்திய இராணுவத்தினரை நாம் சர்வதேச தரத்தில் உயர்த்த உள்ளோம்.
இராணுவத்திற்கு சிறந்த எதிர்காலமொன்றை ஏற்படுத்தியுள்ளோம்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார். "இனிமேலும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. வடக்கில் இராணுவத்தினால் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்தமைக்கு சர்வதேசத்தின் பாராட்டுக்கள் எம்மை வந்து சேர்ந்துள்ளன" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற இராணுவத்தினரை நேற்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.