யாழில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை
யாழ்ப்பாணத்தில் எந்வொரு ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
புங்குடுதீவில் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை அடுத்து யாழில் பதற்ற நிலை ஏற்பட்டது.
கடந்த 20ம் திகதி மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை யாழ் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போது, மாணவியின் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி, நீதிமன்றத்தின் முன் முன்னெடுக்கப்பட்ட பாரிய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.
அத்துடன் பொலிஸார் உள்ளிட்ட பலர் இதில் காயமடைந்ததோடு, சம்பவம் தொடர்பில் 130 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.