Breaking News

தென்னிலங்கை வாழ் தமிழர் தொடர்பில் தேர்தல் முறை கொள்கை ஆவணம் இன்று கையளிப்பு

மலை­யகம், கொழும்பு உட்­பட தென்­னி­லங்கை மாவட்­டங்­களில் வாழும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களை உறு­திப்­ப­டுத்தும் கொள்கை வழி­காட்டல் நிலைப்­பா­டுகள் அடங்­கிய ஆவணம் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­பட உள்­ள­தாக ஜன­நா­யக மக்கள் முன்­னணியின் தலைவரும் தேசிய நிறை­வேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரி­வித்தார். 

மத்­திய மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம், சப்­ர­க­முவ மாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய மாகா­ணங்­களில் வாழும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களை உறு­திப்­ப­டுத்தும் இந்த கொள்கை வழி­காட்டல் ஆவ­ணத்தை தன்­னுடன், தொழி­லாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகாம்­பரம், மலை­யக மக்கள் முன்­னணி அரசியல் துறை தலைவர் இராதா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் இணைந்தே இன்று ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்க உள்­ள­தாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறி­ய­தா­வது,

அனைத்து சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சிகள் மட்ட கலந்­து­ரை­யாடல் செயற்­பா­டுகள் நடை­பெறும் அதே­வே­ளையில், தென்­னி­லங்கை மாவட்­டங்­களில் வாழும் தமிழ் மக்­களின் பிரத்­தி­யேக பிர­தி­நி­தித்­துவ தேவைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. நமது பிரத்­தி­யேக முன்­னு­ரிமை தேவை­யாக தொகுதி எல்­லைகள் மீள் நிர்­ணயம் என்ற விவ­காரம் இருக்­கின்­றது. கடந்த காலங்­களில் ஆட்­சியில் இருந்த அர­சுகள் அனைத்தும் தங்கள் அர­சியல், இன நல தேவை­களை முன்னி­றுத்தி சொந்த நிகழ்ச்சி நிரல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே தொகுதி எல்­லை­களை நிர்­ணயம் செய்­துள்­ளன. அதை நான் எனது ஆட்­சியில் செய்­யப்­போ­வது இல்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் அளித்த உறு­தி­மொ­ழியை நாம் பெரிதும் பாராட்டி வர­வேற்­கின்றோம்.

புதிய தேர்தல் முறைமை திருத்த சட்­ட­மூல விவ­கா­ரத்தில், நுவ­ரெ­லியா, கொழும்பு, பதுளை, கண்டி, இரத்­தி­ன­புரி, கம்­பஹா, கேகாலை, மாத்­தளை, புத்­தளம், களுத்­துறை ஆகிய தென்­னி­லங்கை மாவட்­டங்­களில் வாழும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் தொடர்­பாக ஜன­நா­யக மக்கள் முன்­னணி, தொழி­லாளர் தேசிய சங்கம், மலை­யக மக்கள் முன்­னணி ஆகிய நமது மூன்று கட்­சி­களின் பிர­தி­நி­திகள் தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யுள்­ளார்கள். இந்த பேச்­சு­வார்த்­தை­களில் உரு­வான கருத்­தொ­ரு­மைப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ஆவ­ணமே இன்று ஜனா­தி­ப­தி­யிடம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த ஆவ­ணத்தில் புதிய தேர்தல் முறைமை அர­சி­ய­ல­மைப்பு சட்ட திருத்­தத்தின் பிர­தான ஒரு அம்­ச­மாக தொகுதி மீள் நிர்­ணயம் அமைந்­துள்­ளதை நாம் வர­வேற்­றுள்ளோம். கடை­சி­யாக 40 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­மேயே தொகுதி மீள் நிர்­ணயம் நடை­பெற்­றது. அவ்­வே­ளையில் நாட்டின் ஜனத்­தொகை 70 இலட்­ச­மாகும். இன்று நாட்டின் ஜனத்­தொகை 200 இலட்­சத்தை கடந்து விட்­டது. இதற்­க­மைய தென்­னி­லங்­கையில் தமிழர் ஜனத்­தொ­கையும் அதி­க­ரித்­துள்­ளது. அத்­துடன் கடந்த காலங்­களில் கணி­ச­மான மலை­யக தமி­ழர்கள் குடி­யு­ரிமை, வாக்­கு­ரிமை இல்­லாது இருந்த நிலை­மையும் இன்று மாறி­யுள்­ளது.

இவற்றை கணக்கில் எடுத்து நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் புதிய நான்கு தனித்­தொ­கு­திகள் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதே­வேளை நுவ­ரெ­லியா, கொழும்பு, கண்டி, பதுளை ஆகிய மாவட்­டங்­களில் பல்-­அங்­கத்­தவர் தொகு­திகள் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதுபோல் இரத்­தி­ன­புரி, கம்­பஹா, கேகாலை, மாத்­தளை, களுத்­துறை, புத்­தளம் ஆகிய மாவட்­டங்­க­ளிலும் ஜனத்­தொகை செறி­வுக்கு ஏற்ப பல் -­அங்­கத்­தவர் தொகு­திகள் உரு­வாக்­கப்­படும் சாத்­தி­யங்கள் பற்­றியும் ஆரா­யப்­ப­ட­வேண்டும்.

அதுபோல் அமை­ய­வி­ருக்கும் தொகுதி மீள் நிர்­ணய பணியின் சுயா­தீனம் உறு­திப்­ப­டுத்­தப்­படும் முக­மாக, மீள் நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் இணை தவி­சா­ள­ராக தேர்தல்கள் ஆணை­யாளர் நிய­மிக்­கப்­பட வேண்டும். இந்த ஆணைக்­கு­ழுவில் தேசிய சக­வாழ்­வுக்கு முர­ணற்ற முறையில் நமது மக்­களின் நலன்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிர­தி­நிதி நிய­மிக்­கப்­பட வேண்டும். 

இவற்­றுக்­க­மைய எல்­லைகள் மீள் நிர்­ணயம் தொடர்பில் நாம் சில உறு­தி­மொ­ழி­களை எதிர்­பார்க்­கின்றோம். புதிய பாரா­ளு­மன்ற தேர்தல் சட்­டத்தின் கொள்கை வழி­காட்­டல்­களை அடிப்­ப­டை­யாக கொண்டே மாகா­ண­சபை, உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் சட்­டங்கள் புதி­தாக திருத்­தப்­பட்டு, வடி­வ­மைக்­கப்­பட்டு சட்­ட­மாக்­கப்­பட வேண்டும்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நிறைவேற் றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். அதனடிப்படையில் தற்போது உருவாக்கப் பட்டு வரும் பிரதேச சபை, நகரசபை, மாநகரசபை உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லை நிர்ணயங்கள் ரத்து செய்யப்பட்டு அவை, தேசிய மீள் நிர்ணய குழுவின் கண்காணிப்பில் சுயாதீன நிபுணர்களினால் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ஆகிய கொள்கை வழிக்காட் டல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் உள்ளடங்குகின்றன.