Breaking News

போர்க்குற்ற விசாரணை குறித்த ஜோன் கெரியின் நிலைப்பாடு – சொல்ஹெய்ம் வரவேற்பு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, கேட்டுக் கொண்டதற்கு, இலங்கை க்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர், கொழும்பில் உரையாற்றிய போது, ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து டுவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள, இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், “ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், எஞ்சியுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஜோன் கெரி கேட்டுக் கொண்டுள்ளார். நல்லது! ” என்று குறிப்பிட்டுள்ளார்.