இலங்கை அணியின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக மைக்கல் மெயின்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்பயிற்சி வழங்கும் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், தனது கடமைகளை பொறுப்பேற்றார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் Hampshire கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார். இவர், வீரர்களை வலுவூட்டுதல் பற்றியும், விளையாட்டு கற்கைகள் பற்றியும் பல்கலைக்கழக பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.