வடமராட்சியில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்
வடமராட்சி கிழக்கில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
உடுத்துறைப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அதனைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களது தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்தார்.
உடுத்துறை, ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலன் சிவபாதசுந்தரம் (வயது-56 ) என்பவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மந்திகைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸார் ஏதிர்பார்த்து வந்தமையைப் போன்று சட்டவிரோத மதுபானம் குறித்த இடங்களில் அகப்பட்டிராத நிலையிலும் அங்கிருந்தவர்களை பொலிஸார் தாக்கினர் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.