ஆந்திரா படுகொலை! சிபிஐ-க்கு மாற்ற முடியாது என தீர்ப்பு
ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் கொல்லப் பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற முடியாது என ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும், எனக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை ஏற்று விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற இயலாது என தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில், மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற இயலாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் மறுபிரேத பரிசோதனை அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.