Breaking News

என் தந்தை மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்- நாமல் சவால்


தனது தந்தையோ அல்லது குடும்பத்தினரோ, வெளிநாடுகளில் 18 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாக,  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குச் சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும், 18 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வியாழக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறியிருந்தார். இந்தநிலையில், இதுகுறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தானோ அல்லது தந்தை, தாய் அல்லது சகோதரர்களோ வெளிநாடுகளில் 18 பில்லியன் டொலர் சொத்துக்களைப் பதுக்கியுள்ளதை அமைச்சர் மங்கள சமரவீர நிரூபித்தால், அரசியலை விட்டே விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.