Breaking News

வித்தியாவுக்காக விசேட நீதிமன்றமா? ஏற்க முடியாதாம் ஞானசாரதேரர்

வடக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கை விசாரிக்க விசேட நீதிமன்றம் எதுவும் தேவையில்லை. 

இதனை ஏற்கவும் முடியாது" என்று பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கிருலப்பனையில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தக் கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

ஆனால் விசேட நீதிமன்றம் ஊடாக விசாரணை நடத்துவதை ஏற்க முடியாது. இரத்தினபுரியின் கொட்டகதவில் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அப்போது விசேட நீதிமன்றங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு இன்னொரு நீதியும் அமுல்படுத்த முடியாது. முழு நாட்டுக்கும் ஒரே நீதியே இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.